இயக்குனர் சுரேஷ் சங்கையா (வயது 40) மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு நேற்று (நவம்பர் 15) இரவு சிகிச்சை பலனின்றி சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
விதார்த் நடித்த ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சுரேஷ், தனது முதல் படத்திலேயே விமர்சகர்களிடம் பெரும் பாராட்டை பெற்றார். பின்னர் பிரேம்ஜி அமரன் நடித்த ‘சத்திய சோதனை’ படத்தையும் இயக்கினார், இது கூட விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் யோகி பாபுவை வைத்து ஒரு புதிய படத்தை முடித்திருந்தார், ஆனால் அது இன்னும் வெளியீட்டுக்கு வரவில்லை. இதோடு மற்றொரு படத்தையும் இயக்கி முடித்துள்ளார்.
இந்நிலையில், மஞ்சள் காமாலை நோயின் தாக்கம் மற்றும் கிட்னி பிரச்னையால் அவர் உயிரிழந்துள்ளார். இவரின் சொந்த ஊரான தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதிகளில் அவர் குடும்பத்துடன் வாழ்ந்துள்ளார். திருமணமான இவர், இரண்டு குழந்தைகளின் தந்தையாக இருந்தார்.