Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

கூலி திரைப்படமும் குட் பேட் அக்லி திரைப்படமும் மோதலா? தீயாய் பரவும் புது தகவல்! Coolie × GoodBadUgly

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான ‘கூலி’ பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சவுபின் ஷாயிர், நாகர்ஜுனா, சுருதிஹாசன், சத்யராஜ் மற்றும் உபேந்திரா ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.

ரஜினிகாந்த் ‘தேவா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை பெற்ற அவர் தற்போது படப்பிடிப்பில் மீண்டும் ஈடுபட்டுள்ளார். ஐதராபாத், விசாகப்பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

படம் 2024 ஏப்ரல் மாதத்தில் வெளியாவதாக தகவல் இருந்த நிலையில், தற்போது 2024 மே 1-ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. அதே தேதியில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படம் வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவ்விரு படங்களும் மோதவுள்ளதாக தீயாய் தகவல் பரவி வருகிறது.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News