நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டவர் சமந்தா. சில ஆண்டுகள் அவர்களுடன் வாழ்ந்த பிறகு, இருவரும் விவாகரத்து செய்துள்ளனர். தற்போது, நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராக உள்ளதாகவும், சமந்தா பிஸியாக நடிப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியாகிய சிட்டாடல் வெப் சீரிஸ் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த சூழலில் சமந்தா அளித்த ஒரு பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அதில், “நான் தாய்மையை அடைவதில் தாமதம் ஆனது என்று நினைக்கவில்லை. எனக்கு தாயாக வேண்டும் என்ற கனவுகள் இன்னும் இருக்கின்றன. அது ஒரு அழகான அனுபவம், அதை நான் எதிர்பார்க்கிறேன்.
மக்கள் எனது வயதைப் பற்றிக் கவலைப்படுகின்றனர். ஆனால் தாயாக இருக்க முடியாத நேரம் என்பது வாழ்க்கையில் கிடையாது” என்று கூறினார்.மேலும், சமந்தா இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வலியுறுத்திவந்த நிலையில், “முதல் திருமணத்தைவிட இரண்டாவது திருமண விவாகரத்துக்கள் அதிகம் என்பதே உண்மை” என்று முன்பே ட்விட்டரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.