Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

பிரபாஸ்-ஐ மூன்று வருடங்களுக்கு லாக் செய்த பிரபல பட தயாரிப்பு நிறுவனம்… இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கன்னட திரைப்பட உலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகத் திகழும் நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ். கே.ஜி.எப் 1 மற்றும் 2, சலார் 1, காந்தாரா 1 போன்ற பெரிய அளவிலான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படங்களை உருவாக்கி, வெற்றிகரமாக வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக, இந்த நிறுவனம் தெலுங்கு நடிகர் பிரபாஸை மையமாகக் கொண்டு ‘சலார் 1’ படத்தை தயாரித்தது. இப்போது, பிரபாஸை வைத்து மூன்று படங்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார்கள். முதற்கட்டமாக, சலார் 2ம் பாகத்தைத் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த அறிவிப்பில் இந்த மூன்று படங்களும் 2026, 2027, மற்றும் 2028 ஆண்டுகளில் வெளிவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய‌ சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் பிரபாஸின் அடுத்த லைன் அப்களாக தி ராஜா சாப், ஸ்பிரிட், கல்கி 2, சலார் 2 என பல படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News