Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ஆண்டவர் ஒருபுறம் அட்மேன் ஒருபுறம்… ஆக்‌ஷனோடு ரத்தம் தெறிக்க வெளியான தக் லைஃப் ரிலீஸ் தேதி டீஸர்! #ThugLife

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு உருவாகி வரும் படம் ‘தக் லைப்’. இதில் சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ், ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கின்றார்.

இன்று கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் கமல்ஹாசனும் சிம்புவும் ரத்தம் தெறிக்க சண்டை புரிகின்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் 5ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கமலின் விக்ரம் படம் 2022ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News