விஜய் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கும் ‘தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பு, சென்னைக்கு அருகிலுள்ள பையனூரில் உள்ள பெப்சி அமைப்பினரின் சொந்த இடத்தில் தொடங்கியது. கலை இயக்குநர் செல்வகுமார் பாடல் காட்சிக்காக பிரமாண்டமான ஒரு அரங்கத்தை அமைத்திருந்தார். அங்கு மிகச் சிறப்பான பாடல் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டது. விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்த இந்த காட்சியில் ஒரு டூயட் பாடலும் படமாக்கப்பட்டது. அதன் பின் விஜய், தனது அரசியல் பணிகளில் ஈடுபட்டார். இதற்கிடையில், பையனூரில் அடுத்த காட்சிகளுக்கான அரங்கம் அமைக்கும் வேலைகள் மீண்டும் தொடர்ந்தன.
படப்பிடிப்புக்கான செட் பணிகள் முழுமையாக முடிவடைந்த பின், கடந்த 4ம் தேதி முதல் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பித்தது. இந்த ஷெட்யூலில் பாபி தியோல் இணைந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சில முக்கிய டயலாக் சீன்கள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தை தயாரித்து வரும் ‘KVN Productions’ நிறுவனம், கன்னடத்தில் ‘KGF’ புகழ் நடிகர் யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தையும் தயாரிக்கிறது. இதற்கு முன் ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘அனிமல்’, ‘சீதா ராமம்’, ‘கல்கி’ போன்ற படங்களின் கன்னட விநியோக உரிமைகளை வாங்கி வெளியிட்டுள்ளது. தற்போது சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படத்தின் விநியோக உரிமையையும் பெற்றுள்ளது. ‘கங்குவா’ படம் 14ம் தேதி வெளியாவதால், அதற்குப் பிறகு ‘தளபதி 69’ குறித்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.