தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜ் முன்னணியில் உள்ளார். 2022 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின், விஜய் நடிப்பில் ‘லியோ’ படத்தை இயக்கினார், இப்பாடமும் அதிக வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வசூலை சம்பாதித்தது.
தொடர்ந்து, ரஜினிகாந்தின் 171-வது படமான ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஒரு நேர்காணலில் பேசிய லோகேஷ் கனகராஜ், ரஜினியும் கமல்ஹாசனும் வேறுபட்ட பல்வேறு அம்சங்களைப் பகிர்ந்துகொண்டார். இது குறித்து அவர் கூறியதாவது,
‘ரஜினி சார், இயக்குநர்களின் நடிகர் என்ற வகையில் விளங்குகின்றார். படத்தில் மற்ற நடிகர்கள் எப்படி நடிக்கிறார்கள், அதற்கேற்ப தானும் எவ்வாறு நடிக்க வேண்டும் என்று எப்போதும் சிந்திப்பார். அதே வேளையில், கமல் சார் முற்றிலும் வேறுபட்டவர். தன்னைக் தொழில்நுட்ப கலைஞர் என்று தானே கூறிக் கொள்வார். எனவே ஒரு காட்சி பற்றிய பேச்சில் நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞரிடையே இருக்கும் பரிமாற்றத்தில் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக நினைக்கிறேன். இருவருமே கேமராவுக்கு முன்பு வந்தபோது தங்கள் நடிகர் தன்னை மறந்து அந்த கதாபாத்திரங்களாகவே முழுமையாக மாறிவிடுகிறார்கள்’ என்றார்.