சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான ‘கூலி’ பான் இந்தியா படமாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அந்த வகையில் சவுபின் ஷாயிர், நாகர்ஜுனா, சுருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா போன்றோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் ரஜினிகாந்த் ‘தேவா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த ரஜினிகாந்த், தற்போது மீண்டும் கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகளில் இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் சமீபத்திய அளித்த பேட்டியில், கமல்ஹாசன் ரசிகன் ரஜினிகாந்த் படத்தில் என்ன செய்ய முடியும் என்பதை காட்ட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். தற்போது இப்படத்தின் வெளியீடு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, ‘கூலி’ திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த பிறகு, லோகேஷ் கனகராஜ் ‘கைதி 2’ படத்தை இயக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.