Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

காத்திருந்த ரசிகர்களுக்கு காட்சிக்கொடுக்க வரும் கமல்ஹாசன்… விரைவில் வெளியாகவுள்ள தக் லைஃப் படத்தின் மாஸ் அப்டேட்! #THUG LIFE

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் தற்போது நடித்து வரும் படம் தக் லைஃப். கமலுடன் சேர்ந்து சிம்பு, திரிஷா, விருமாண்டி புகழ் அபிராமி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நெருங்கி வந்துவிட்டதாக கூறப்படுகிறது. பல வருடங்கள் கழித்து கமல் – மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணி இதற்கு முன்பு நாயகன் என்ற மிகப்பெரிய கல்ட்கிளாசிக் படத்தை வழங்கியுள்ளனர். அந்த படம் இன்று வரை இந்திய சினிமாவில் பலரின் விருப்பமான படமாகவும், பேராற்றலான முன்மாதிரியாகவும் இருந்து வருகிறது. இப்போது அவர்கள் மீண்டும் இணைந்திருப்பதால், தக் லைஃப் அப்படியொரு கல்ட்கிளாசிக்காக மாறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கமல் ஹாசன் வரும் ஏழாம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் இப்போதே கொண்டாடத் தயாராகி வருகின்றனர். அதே சமயத்தில், கமலின் பிறந்தநாளை முன்னிட்டு தக் லைஃப் படத்தில் இருந்து ஒரு புதிய அப்டேட் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அது படத்தின் ட்ரெய்லராக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

- Advertisement -

Read more

Local News