Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

தக் லைஃப் படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த நடிகை திரிஷா… என்னனு தெரியுமா? #THUG LIFE

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு உருவாக்கும் திரைப்படம் ‘தக் லைப்’. இந்த படத்தில் சிலம்பரசன், அசோக் செல்வன், த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ், ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணியாற்றுகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ராஜஸ்தான், டில்லி, புதுச்சேரி, கோவா போன்ற இடங்களில் 120 நாட்களுக்கு மேல் நடைபெற்றது மற்றும் சமீபத்தில் முடிவடைந்தது. படத்தில் ஒரு பாடல் காட்சியையே உள்ளடக்கியதாக இருந்த நிலையில், த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தக் லைப் படத்தின் பாடல் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகப் பதிவிட்டுள்ளார். இந்த பாடல் ஆல்பத்தில் தன் மனதில் பெரிய இடம் பிடித்த பாடலாக இதைத் தெரிவித்துள்ளார். சிம்பு மற்றும் த்ரிஷாவுக்கு இடையேயான காதல் பாடல் காட்சி தற்போது மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News