Monday, November 4, 2024

அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையில் குறுக்கெழுத்து போட்டியில் இடம்பெற்ற திரிஷா பெயர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ், தெலுங்கு சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக இருப்பவர் த்ரிஷா. தற்போது அஜித்துடன் ‘விடாமுயற்சி, குட் பேட் அக்லி’, கமல்ஹாசனுடன் ‘தக் லைப்’, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘விஷ்வம்பரா’, மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘ராம்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

அமெரிக்காவின் பிரபலமான பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ், தனது ‘குறுக்கெழுத்து போட்டியில்’ த்ரிஷாவைப் பற்றிய ஒரு கேள்வியைக் கேட்டுள்ளது. அந்த கேள்விக்கான க்ளூவாக ‘கிருஷ்ணன் நடிகை, தென்னிந்திய சினிமா’ என்ற செய்தியைக் கொடுத்துள்ளது. 52வது வார்த்தைக்கான விடையாக அந்தக் கேள்வியை முடிவுறுத்தியுள்ளனர்.

தமிழ் நடிகை ஒருவரது பெயர் அமெரிக்காவின் பிரபல பத்திரிகையில் இடம்பெற்றிருப்பது ஆச்சரியமாகும். நடிகை சமந்தா, அந்த குறுக்கெழுத்து போட்டி பக்கத்தைப் பகிர்ந்து த்ரிஷாவை ‘குயின்’ எனப் பாராட்டியுள்ளார். த்ரிஷா அவருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News