இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள `ப்ளடி பெக்கர்’ திரைப்படத்தை இயக்குனர் சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இசையமைப்பாளராக ஜென் மார்டின் பணியாற்றியுள்ளார்.
இந்த படத்தில், கவின் ஒரு பிச்சைக்காரனாக மாறுபட்ட தோற்றத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். தீபாவளி அன்று வெளியான இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை பார்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படக்குழுவினரை பாராட்டினார்.
அவரது பாராட்டில், “ப்ளடி பெக்கர் எனக்கு மிகவும் பிடித்த ஒரு திரைப்படமாக அமைந்தது. இதில் வரும் நகைச்சுவை காட்சிகள் எனக்கு மிகவும் வொர்க் அவுட் ஆகி இருந்தது. இது தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியாகும். வெளிநாட்டு திரைப்படங்களில் இதுபோன்ற முயற்சிகள் பார்த்ததுண்டு, ஆனால் தமிழ் திரையுலகில் இதுவே முதன்முறையாகவே வருகிறது. தயாரிப்பாளர் நெல்சனுக்கு வாழ்த்துக்கள், கவின் அருமையாக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்; அவருக்கு எனது வாழ்த்துக்கள். ரெடிங் கிங்ஸ்லி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்” என்றார்.