Touring Talkies
100% Cinema

Sunday, August 3, 2025

Touring Talkies

இலங்கையில் ஜாலியாக VIBE செய்யும் நடிகை சம்யுக்தா… லைக்குகளை குவித்த ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள சினிமா உலகிலிருந்து தென்னிந்திய படங்களுக்கு பல ஹீரோயின்கள் வரிசையாக வருகை தருகின்றனர். அதில் ‘வாத்தி’ படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் சம்யுக்தா. தன் பெயருக்குப் பின்னால் ‘மேனன்’ எனும் சாதிப் பெயரை நீக்கியது அவரது ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது.

அவர் இதைப் பற்றி கூறியதாவது: “‘வாத்தி’ படத்திலிருந்து அந்தப் பெயர் இருக்காது. சாதி அடையாளத்தைத் தாங்கிக்கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. சாதியிலும் உடன்பாடு இல்லை. என்னை சம்யுக்தா எனக் கூறினாலே போதும்” என தெரிவித்துள்ளார். ‘வாத்தி’ படத்துக்குப் பிறகு தமிழில் புதிய படத்தில் அவர் கமிட் ஆகவில்லை.

புதுப்பட ஒப்பந்தங்களை அவர் ஏற்காமல் இருந்ததற்கு காரணம் தனது நீண்ட நாள் காதலரை மணம் முடிக்க உள்ளதற்காகவாம் என்ற தகவல் பரவியுள்ளது. ஆனால், சம்யுக்தா தரப்பில் இதைப் பற்றிய பதில் கூறாமல், அமைதியாக இருந்து வருகின்றனர். இதற்கிடையில் அவர் வெளியிட்ட மாடர்ன் உடை புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News