அயோத்தியில் உள்ள ராமர் கோவில் அருகே குரங்குகளுக்கு தினமும் உணவளிக்க நடிகர் அக்ஷய் குமார் ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார்.
ஜகத்குரு ஸ்வாமி ராகவாச்சார்யாஜி மகராஜின் வழிகாட்டுதலின் கீழ் ‘ஆஞ்சநேய சேவா’ என்ற அறக்கட்டளை அயோத்தியில் உள்ள குரங்குகளுக்கு தினமும் உணவளித்து வருகிறது.
இந்த அறக்கட்டளைக்கு நடிகர் அக்ஷய் குமார் 1 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். அயோத்தியில் உள்ள குரங்குகளை மக்கள் அனுமாராக கருதுவதால், அக்ஷய் குமார் தனது நன்கொடையை வழங்கியுள்ளார்.