மலையாளம், தமிழ், ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன், தற்போது அவர் முதல் முறையாக தெலுங்கு பட உலகில் பிரவேசிக்கிறார். பிரபாஸ் நடித்திருக்கும் ‘தி ராஜா சாப்’ என்ற திரைப்படத்தின் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார். இந்த திரைப்படம் ஒரு திகில் கதையில் உருவாகிறது.
தெலுங்கில் தனது அறிமுகம் குறித்துப் பேசும் மாளவிகா மோகனன், தெலுங்கு திரையுலகில் நான் சரியான படத்தின் மூலம் அறிமுகமாக வேண்டும் என நினைத்தேன், அதற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன் என்று கூறினார்.
“இப்போது பிரபாஸ் நடிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதைவிட சிறப்பான அறிமுகம் எனக்கு கிடைக்க முடியாது என்று நினைக்கிறேன். அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாக இருக்கிறது. ரசிகர்களைப்போலவே நானும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்,” என அவர் தெரிவித்தார்.