Tuesday, October 29, 2024

என் தம்பி போன்று நானும் விரைவில் சரளமாக தெலுங்கில் பேசுவேன்… சூர்யா டாக்! #Kanguva

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் அடுத்த மாதம் 14ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், படக்குழு தீவிர விளம்பர பணிகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக இருப்பதால், ஐதராபாத், டில்லி, மும்பை போன்ற நகரங்களில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சிகளில் சூர்யா கலந்து கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ‘கங்குவா’ படத்தின் புரமோஷனுக்காக சூர்யா மற்றும் இயக்குநர் சிவா இருவரும் ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நாகார்ஜூனா சூர்யாவிடம் தெலுங்கில் பேசுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு சூர்யா, “நான் தெலுங்கில் சில வார்த்தைகள் மட்டுமே பேசுவேன். எனைவிட என் தம்பி கார்த்தி தெலுங்கில் மிகவும் நன்றாக பேசுவார். அவர் தெலுங்கு நடிகர்களுடன் பேசும்போது தெலுங்கிலேயே பேசுவார்,” என்று கூறினார்.

மேலும், குறுகிய காலத்தில் என் தம்பி தெலுங்கு மொழியை விரைவாக கற்றுக்கொண்டதைப் பார்த்து எனக்கு பொறாமையாக இருக்கிறது. அதனால் நானும் விரைவில் தெலுங்கு கற்றுக்கொண்டு, என் தம்பி போன்று சரளமாக தெலுங்கில் பேசுவேன்” என்று சூர்யா தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News