சென்னை நகரில் பிரதர் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர் ஜெயம் ரவி, பூமிகா, நட்டி நட்ராஜ், விடிவி கணேஷ் மற்றும் இயக்குநர் ராஜேஷ் உட்பட படக்குழுவினர் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பில் விடிவி கணேஷ் உரையாற்றும்போது, “இயக்குநர் ராஜேஷ் ஒரு சிறந்த இயக்குநர். பிரதர் படம் சிறப்பாக உருவாகி உள்ளது. ஜெயம் ரவி அழகான தோற்றமுடையவர் மட்டுமல்ல, திறமையான நடிகர், படம் இயக்குவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல காட்சிகளில் இதை அப்படி செய்யலாம், இப்படி செய்யலாம் எனத் தொடர்ந்து கருத்துகளை சொல்லிக் கொண்டே இருப்பார்,” என்றார்.

“எனக்கு தெரிந்தவரையில், சிம்பு பிறகு திரைப்பட இயக்கத்தில் ஆர்வம் காட்டும் நடிகர் ஜெயம் ரவி தான் என்று நான் நினைக்கிறேன். நாயகி பிரியங்கா மோகன் மற்றும் ஜெயம் ரவிக்கு இடையில் கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க் அவுட் ஆகியுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார். ஜெயம் ரவி – பிரியங்கா மோகன் நடித்திருக்கும் பிரதர் திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.