சிவா இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் ‘கங்குவா’ படத்தை தயாரித்துள்ளவர் கே.ஈ. ஞானவேல் ராஜா. சமீபத்திய பேட்டியில், அவர் ‘கங்குவா’ படம் 2000 கோடி ரூபாய் வசூலிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். இந்திய சினிமாவில் அண்மையில் வெளியான எந்த படமும் இவ்வளவு பெரிய அளவில் வசூல் சாதனை செய் வில்லை.
ஆமிர்கானின் ‘டங்கல்’ படம் சீன வெளியீட்டிற்குப் பிறகு 2000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த முதல் படம் ஆகும், அதற்கு பின்பு தெலுங்கு படமான ‘பாகுபலி 2’ 1800 கோடி வரை வசூலித்தது. தமிழில் மிக அதிகமாக வசூல் செய்த படம் ரஜினிகாந்தின் ‘2.0’, இது 800 கோடி ரூபாய் வரை வசூலித்தது என கூறப்படுகிறது.

‘கங்குவா’ 2000 கோடி ரூபாய் வசூலிக்குமா என ஐதராபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது சூர்யாவிடம் கேட்டனர். அதற்கு அவர், “பெரிய கனவுகள் காண்பது தவறல்ல. அந்த கனவு நிஜமாகும் என நம்புகிறேன், பிரபஞ்சத்தின் சக்தியை நம்புகிறேன், அது நிகழட்டும், எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்” எனக் கூறினார். இதேபோல் ‘கங்குவா’ படத்துக்காக, படக்குழுவினர் பல ஊர்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியும் விளம்பரத்தை விரிவுபடுத்தி வருகின்றனர்.