Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

நான் மிஸ் செய்த படங்கள் எல்லாம் ஹிட்… வருத்தத்துடன் பகிர்ந்த பிரதர் பட நடிகை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிப் படங்களிலும் 90கள் இறுதி மற்றும் 2000கள் தொடக்கத்தில் பிஸியான நாயகியாக வலம் வந்தவர் நடிகை பூமிகா சாவ்லா. தற்போது சில வருடங்களாக, முக்கியமான படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இப்போது தமிழில் ராஜேஷ் எம் இயக்கத்தில் ‘பிரதர்’ என்ற படத்தில், ஜெயம் ரவியின் அக்காவாக நடித்துள்ளார் பூமிகா. அக்கா – தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதற்கான புரொமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

பூமிகா ஒரு பேட்டியில் கூறியதாவது, “நான் நடிக்க வேண்டுமென ஆசைப்பட்ட சில படங்களில், நேரம் சரியாக அமைவில்லையால், நடிக்க முடியவில்லை. தெலுங்கில் ‘அஷ்ட சும்மா’ என்ற படத்தை மிஸ் செய்தேன், ஆனால் அது பெரிய ஹிட்டானது. அந்தப் படத்தில் நடிக்க, எனது திருமணம் காரணமாக முடியவில்லை. அதுபோலவே, தமிழில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் நடிக்க வேண்டியிருந்தது, ஆனால் நடிக்கவில்லை. அப்போது அம்மா கதாபாத்திரத்தில் நான் பொருந்தவில்லை என எண்ணினேன்” என கூறினார்.

- Advertisement -

Read more

Local News