Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

கங்குவா திரைப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் கற்பனை செய்யாத ஒரு உலகத்தை கொண்டு வரும்‌ – நடிகர் சூர்யா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்துள்ளார், இது விரைவில் ரிலீஸுக்குத் தயாராகியுள்ளது. படத்தினை நவம்பர் 14ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, இதற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாடலான ‘யோலோ’ வெளியானது, அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘கங்குவா’வில் சூர்யா இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். திஷா பதானி, பாபி தியோல் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ப்ரோமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டபோது சூர்யா, ரசிகர்களிடம் தனது உணர்ச்சியை பகிர்ந்துகொண்டார். “மக்கள் கொடுக்குற அளவுக்கடங்காத அன்புக்கு நான் என்ன திருப்பி தரப்போறேன்னு தெரியல. என்னால முடிஞ்ச அளவுக்கு உழைப்பு கொடுப்பேன். 49 வயதுலயும் ‘கங்குவா’ திரைப்படத்துல 6 பேக் உடம்புடன் நடித்திருக்கேன்.

முந்தைய பேச்சில் சொன்னது போல், ‘கங்குவா’ ஒரு குழந்தை மாதிரி. மக்களுக்கு இது நிச்சயமாக பிடிக்கும். மற்ற மொழிகளில் ‘பாகுபலி’, ‘RRR’ படங்கள் இருக்கின்றன, தமிழுக்கு ‘கங்குவா’ அந்த வகையில் அமையும். ‘கங்குவா’ திரைப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் கற்பனை செய்யாத ஒரு உலகத்தை கொண்டு வருவதாக இருக்கும். இது நிச்சயமாக ஒரு கல்ட் கிளாசிக் திரைப்படமாக உருவாகும்,” என அவர் கூறினார். இதற்கான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

Read more

Local News