Tuesday, October 22, 2024

சூர்யாவுக்கு ஜோடியாகிறாரா ருக்மணி வசந்த்? அப்போ காஷ்மீரா இல்லையா? #Suriya45

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் வெளிவர தயாராகி வரும் நிலையில், அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தை முடித்துவிட்டார். இதையடுத்து சூர்யாவின் 45வது படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்க உள்ளார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க, இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் பணிபுரிகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்குகிறது.

இந்த படத்தில் முதலில் நடிகை காஷ்மீரா பர்தேசி ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் வெளியானது. இப்போது, கதாநாயகியாக ருக்மணி வசந்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ருக்மணி வசந்த் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்கும் படத்தில் கதாநாயகியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News