“பசங்க”, “வம்சம்”, “கேடி பில்லா கில்லாடி ரங்கா”, “கடைக்குட்டி சிங்கம்”, “நம்ம வீட்டு பிள்ளை”, “எதற்கும் துணிந்தவன்” போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய பாண்டிராஜ், தற்போது விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நித்யா மேனன் நாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவை சுகுமார் மேற்கொள்கிறார், மேலும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு தற்போது திருச்செந்தூரில் நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிக்கும் முக்கியக் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அடுத்ததாக, தூத்துக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட சில கடற்கரைப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்படம் சிறிய நகரத்தை மையமாகக் கொண்ட கதை என கூறப்படுகிறது.