Monday, October 21, 2024

கஜினி 2ல் சூர்யாவும் அமீர்கான்-ம் சேர்ந்து நடிக்கிறாங்களா? ஏ.ஆர்.முருகதாஸ் போட்ட பிளான்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2005 ஆம் ஆண்டில் சூர்யா, அசின், நயன்தாரா நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ‘கஜினி’ திரைப்படம் வெளியானது. 2008 ஆம் ஆண்டில் இதே படத்தை ஹிந்தியில் அமீர்கானை வைத்து முருகதாஸ் ரீமேக் செய்தார். அந்த படத்தில் அசினே நாயகியாக நடித்தார். தற்போது, ‘கஜினி’ படத்தின் இரண்டாம் பாகத்தை முருகதாஸ் இயக்கத் திட்டமிட்டுள்ளார்.

அமீர்கானை வைத்து முருகதாஸ் ‘கஜினி 2’ இயக்கப்போகிறாராம் என்பது குறித்த தகவல் முன்பே வெளியானது. தற்போது, சூர்யாவும், அமீர்கானும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இதே நேரத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சல்மான் கான் நடிக்கும் படங்களையும் முருகதாஸ் இயக்கி வருகிறார். அவை முடிந்தவுடன் ‘கஜினி 2’ படத்தின் பணியில் அவர் ஈடுபடுவார் என கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News