Monday, October 21, 2024

துப்பறிவாளன் 2 தற்போதைய நிலை என்ன? வெளியான புது அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஷால் தமிழ் சினிமாவில் ‘திமிரு’, ‘தாமிரபரணி’, ‘மலைக்கோட்டை’ போன்ற வெற்றிப்படங்களில் நடித்த முன்னணி நடிகர். தற்போது விஷால் ‘துப்பறிவாளன்-2’ படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார்.

விஷால் நடிப்பிற்குப் பிறகு அவர் இயக்குனராக மாறியுள்ளார் என்பதும், அவர் ஆக்ஷன் கிங் அர்ஜூனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் நடிப்பில் சமீபத்தில் ஹரி இயக்கத்தில் வெளியான ‘ரத்னம்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

2017ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘துப்பறிவாளன்’ படத்தைத் தொடர்ந்து, விஷால் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.படப்பிடிப்பு அஜர்பைஜான், லண்டன், மல்டா போன்ற வெளிநாடுகளில் நடைபெறும். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News