Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

‘பிளடி பெக்கர்’ கதைக்கு கவின் சரியாக இருக்க மாட்டார் என நினைத்தேன்… இயக்குனர் நெல்சன் OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் கவினின் சமீபத்திய படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகின்றன. அதற்காக, “டாடா” மற்றும் “ஸ்டார்” படங்களை தொடர்ந்து, தற்போது நெல்சன் திலிப்குமார் தயாரிப்பில், சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் “பிளடி பெக்கர்” படத்தில் ஹீரோவாக கவின் இணைந்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை சிறப்பாக பெற்றுள்ளன.

இந்நிலையில், இன்று “பிளடி பெக்கர்” படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில், படத்தின் தயாரிப்பாளரான நெல்சன் திலிப்குமார், இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார், நடிகர் கவின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, படத்தின் சுவாரசியங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

படத்தின் தயாரிப்பாளர் நெல்சன் பேசும் போது, “இந்த கதைக்கு கவின் சரியாக அமைய மாட்டார் என்று முதலில் நினைத்தேன். தனுஷ், விஜய்சேதுபதி போன்றவர்களை பரிந்துரைத்தேன். ஆனால், சிவபாலனின் பிடிவாதம் காரணமாக கவினை தேர்வு செய்தார். படத்தை முழுமையாக பார்த்த பிறகு, சிவபாலனுக்குப் பிறகு சிறப்பாக நடித்தது கவின்தான். சில காட்சிகளில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் கவினை வேண்டாம் எனச் சொன்னது பெரிய தவறு என்பதைப் புரிந்துகொண்டேன்,” என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News