Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

இங்கு நான் ஒரு சராசரி நடிகைதான்… சமந்தா OPEN TALK !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் சமந்தாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் அவர் “சிட்டாடல்: ஹனி பன்னி” என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து, சமந்தா அளித்த பேட்டியில், “நான் இன்னும் சராசரி நடிகையாகவே இருக்கிறேன். நடிப்பில் மேலும் முதிர்ச்சி அடைய நான் இன்னும் முயற்சிக்கிறேன். என் சினிமா பயணத்தில் நான் எவ்வளவு வெற்றிகளை சந்தித்திருந்தாலும், அது எல்லாவற்றிற்கும் கூட்டுமுயற்சிதான் காரணம். ஒரு படத்துக்குப் பின்னால் நிறைய நிபுணர்களின் உழைப்பு இருக்கிறது.

ஒரு திரைப்படத்திற்கு திறமையான குழுவினர் இருந்தால் தான் நமது திறமை வெளிப்படும். நான் திறமையான குழுவினர்களுடனும், நடிகர்-நடிகைகளுடனும், தொழில்நுட்ப கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். இது எனக்கு ஒரு அதிர்ஷ்டம்,” என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News