Thursday, October 17, 2024

பாகுபாலி 3 படத்தின் தயாரிப்பு பணிகளில் களமிறங்கிய தயாரிப்பாளர்கள்! #Bahubali 3

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா, ராணா டகுபட்டி உள்ளிட்டோர் நடித்த “பாகுபலி 1” மற்றும் “பாகுபலி 2” ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. முதல்பகத்தை விட இரண்டாம் பகுதி வட இந்தியாவில் மிகுந்த வரவேற்பைப் பெற்று, அதிக வசூலையும் குவித்தது. இந்த வெற்றியால் தெலுங்கு திரைப்படம் வணிக ரீதியாக ஒரு மாபெரும் திருப்புமுனையை அடைந்தது.

இந்த வெற்றியால், ராஜமவுலி இந்திய அளவில் மிகப்பெரிய இயக்குனராக மாறினார். இதற்கு முன்னர், தெலுங்கு திரையுலகத்திற்குள்ளேயே தனது நடிப்பைப் பறைசாற்றி வந்த பிரபாஸ், பான் இந்தியா நடிகராக உயர்ந்தார். அதன் பின், ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த “ஆர்ஆர்ஆர்” படமும் மிகப்பெரிய வெற்றியைச் சந்தித்தது, இதில் நடித்த ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் பான் இந்தியா பிரபலமாகினர். குறிப்பாக, அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல் ஆஸ்கர் விருதை வென்று அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

“பாகுபலி 2” வெளியானபின்னரே “பாகுபலி 3” பற்றிய பேச்சுகள் எழுந்தன. ஆனால், எப்போது உருவாகும் என்பது குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில், “பாகுபலி 1” படத்தை தமிழகத்தில் வெளியிட்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்திய பேட்டியில், “பாகுபலி” படத்தின் தயாரிப்பாளர்கள் ‘பாகுபலி 3’ பற்றி திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார். தற்போது, ராஜமவுலி மகேஷ் பாபுவின் புதிய படத்தை இயக்குவதில் பிஸியாக உள்ளார். அந்தப் படத்தின் வேலைகள் முடிந்தபின்பு, ‘பாகுபலி 3’ படத்தின் வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளார் என கூறிப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News