Tuesday, October 15, 2024

வெளியானது விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி ‘ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்! #Lik

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விக்னேஷ் சிவன் தற்போது “எல்ஐகே” (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளனர். இப்படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இப்படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளன.

படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படம் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக அமைந்துள்ளது, ஒரு காதலை அடைவதற்காக நாயகன் டைம் டிராவல் செய்யும் கதையாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News