Tuesday, October 15, 2024

சூர்யா 44 வருது… சூர்யா 45 வருது… அந்த வாடி வாசல் எப்பதாங்க வரும்? ரசிகர்கள் ஏக்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் “வாடிவாசல்” படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 16ம் தேதி அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்டார். சிசு செல்லப்பா எழுதிய நாவலை மையமாகக் கொண்டு ஜல்லிக்கட்டு பற்றிய கதையாக இப்படம் உருவாக உள்ளது. இதற்காக சூர்யா ஜல்லிக்கட்டு காளை ஒன்றையும் வாங்கி, அதனுடன் பழகியும் வந்தார். 2022ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் அந்தக் காளையுடன் நடந்து சென்ற வீடியோவைப் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

அந்தப் படத்தின் அறிவிப்புக்குப் பிறகு சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அறிவிப்புகள், குழப்பங்கள் என பல நிகழ்வுகள் ஏற்பட்டன. பாலா இயக்கத்தில் “வணங்கான்” படத்தைத் தயாரித்து நடிக்க ஆரம்பித்த சூர்யா, முதற்கட்ட படப்பிடிப்புடன் அந்தப் படத்திலிருந்து விலகினார். பின்பு சுதா கொங்கரா இயக்கத்தில் “புறநானூறு” படத்தில் நடிக்க இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் அந்தப் படத்தை தள்ளிவைத்தனர். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தை முடித்துவிட்டார்.

தற்போது சூர்யாவின் 45வது படமாக ஆர்ஜே பாலாஜி இயக்கவுள்ள படத்தில் நடிக்க இருக்கிறார். இதனால் “வாடிவாசல்” படம் மேலும் தள்ளிவிடும் என்பது தெளிவாகின்றது. “விடுதலை 2” படத்தை முடித்தவுடன் வெற்றிமாறன் “வாடிவாசல்” படத்தை ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் முடிந்ததும், “வாடிவாசல்” படத்தை இயக்க அவர் களத்தில் இறங்குவார். இதனால், சூர்யா நடிக்கும் ஆர்ஜே பாலாஜி படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News