Touring Talkies
100% Cinema

Saturday, October 4, 2025

Touring Talkies

வேட்டையன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த்-ஐ நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்த படக்குழு! #Vettaiyan

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “ஜெயிலர்” படத்தின் மூலம் திரும்பி வந்து, வசூலில் மிகப்பெரிய வெற்றியாளராக மாறியுள்ளார். கடந்த ஆண்டு “ஜெயிலர்” படம் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. அதேபோல, இந்த ஆண்டு வெளியான “வேட்டையன்” திரைப்படம், 4 நாட்களில் 240 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது.

“ஜெய் பீம்” திரைப்பட இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் நடித்துள்ள “வேட்டையன்” படம், சமூக கருத்துக்களுடன் கூடிய ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. அக்டோபர் 10-ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வெற்றி நடைப்போட்டு வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் சிகிச்சை முடித்துக்கொண்டு ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்தை சந்தித்து, “வேட்டையன்” படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குநர் ஞானவேல் மற்றும் இசையமைப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் ரஜினிகாந்திடம் நேரில் சென்று வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News