Monday, October 14, 2024

அமரன் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்கிறாரா நடிகர் சிம்பு? உலாவும் புது தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள “அமரன்” படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் “அமரன்” படத்தின் புரமோஷன் நிகழ்வுகள் நடந்து வருகிறது, இதில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் படக்குழுவினர் பங்கேற்று வருகிறார்கள்.

இதற்கிடையில், “அமரன்” படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 18ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சிம்பு ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தனது 48வது படத்தில் நடிக்க இருந்தார், ஆனால் அதற்கான தகவல்கள் தொடர்ந்து வெளியாகவில்லை. இப்போது, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் “தக்லைப்” படத்தில் சிம்பு கமலுடன் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News