நடிகர் சிவகார்த்திகேயன் ‘அமரன்’ எனும் படத்தில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்துள்ளார். இந்த படம் மறைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதால், இதன் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 18 ஆம் தேதி சென்னை நகரில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் நடத்தப்படும் எனத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more