தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் கதாநாயகன் சிரஞ்சீவி.தற்போது தமிழகத்தில் உள்ள மலைவாசஸ்தலமான ஊட்டியில் 6 ஏக்கர் இடம் ஒன்றை சுமார் 16 கோடிக்கு வாங்கியுள்ளதாகத் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த இடத்தில் பார்ம் ஹவுஸ் ஒன்றைக் கட்ட உள்ளாராம். சமீபத்தில் அவரது மகனும் நடிகருமான ராம் சரண், அவரது மனைவி உபாசானா ஆகியோர் அங்கு சென்று ஆலோசனை மேற்கொண்டதாகவும் சொல்கிறார்கள்.சிரஞ்சீவியின் பல தெலுங்குப் படங்களில் ஊட்டி தவறாமல் இடம் பெற்றதுண்டு. அந்தக் காலத்திய படங்களில் அவரது பாடல் காட்சிகள் பலவும் அங்குதான் படமாக்கப்பட்டுள்ளது. அதனால், சிரஞ்சீவிக்கு ஊட்டி மீது தனி பாசம் என்கிறார்கள்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more