Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ஜீவா மற்றும் அர்ஜூன் கூட்டணியில் உருவான ‘அகத்தியா’… என்ன கதைக்களம் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் முக்கியமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல், பல வெற்றிப் படங்களை வழங்கி வந்துள்ளது. இதுவரை தேவி, தேவி 2, கோமாளி, LKG, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களை தயாரித்த இந்த நிறுவனம், பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளது.

தற்போது, வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல், சுந்தர் சி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’, ‘சுமோ’, மற்றும் ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜீனி’ போன்ற படங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனம் அடுத்ததாக தயாரிக்க உள்ள படத்தின் தலைப்பை அறிவித்துள்ளது. படத்திற்குப் ‘அகத்தியா’ என்ற பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை பா.விஜய் இயக்க, ஜீவா, அர்ஜூன், ராஷி கன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது. இது பீரியட் ஃபேண்டசி டிராமா கதைக்களத்துடன் கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை பற்றிய மேலும் பல தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News