Saturday, October 5, 2024

வார 2 படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்… தள்ளி போகிறதா வெளியீட்டு தேதி! #WAR 2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2019 ஆம் ஆண்டு ஹிருத்திக் ரோஷன் நடித்த வார் படத்தின் வெற்றிக்குப் பிறகு, தற்போது வார் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு எதிராக பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் வில்லனாக நடிக்கின்றார்.

இந்த படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கின்றனர், மற்றும் அயன் முகர்ஜி இயக்குகிறார். ஏற்கனவே, இந்த படத்தை 2025 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்தன. ஆனால் தற்போது, வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி வார் 2 படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News