Saturday, September 28, 2024

வித்தியாசமான கெட்டப்பில் யோகி பாபு… கவனம் ஈர்த்த மிஸ் மேகி பட டீசர்! #MISS MAGGIE

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாதம்பட்டி ரங்கராஜ், யோகி பாபுவுடன் இணைந்து ‘மிஸ் மேகி’ படத்தில் நடித்துள்ளார். இதில், யோகி பாபு பெண் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை லதா ஆர். மணியரசு இயக்கியுள்ளார்.

டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் இசையமைக்கிறார். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு, சதீஷ் சூர்யா படத்தொகுப்பு ஆகியவற்றை செய்துள்ளனர். யோகி பாபு ஆங்கிலோ இந்திய பாட்டியின் தோற்றத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் முடிந்த நிலையில், தற்போது டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், விரைவில் இப்படத்தின் டிரெய்லர், முதல் பாடல் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News