Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் பிரபாஸ்-ன் கல்கி திரைப்படம்! #KALKI

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென் கொரியாவில் ஹயுண்டே-குவின் பூசானில் ஆண்டுதோறும் நடைபெறும் பூசன் சர்வதேச திரைப்பட விழா, 1996-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகிறது. இது ஆசியாவின் முக்கிய திரைப்பட விழாக்களில் ஒன்றாகும். இந்த ஆண்டின் விழா அடுத்த மாதம் 2-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் சமீபத்தில் வெளியான பிரபாஸ் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாக் அஸ்வின் இயக்கிய இந்த படம் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் உருவாகியது. இதில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

‘கல்கி’ திரைப்படம் கடந்த ஜூன் 27-ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியானது. இதுவரை உலகம் முழுவதும் ரூ. 1,200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. தற்போது, இந்த திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் உள்ளது.

- Advertisement -

Read more

Local News