பிக் பாஸ் 7வது சீசன் டைட்டில் வின்னர் அர்ச்சனா சமீபத்தில் ஒரு பேட்டியில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் இம்முறை சில விஷயங்களில் மாற்றங்களைக் கொண்டுவரலாம். அப்படி செய்தால் அதனை நான் மிகவும் விரும்புவேன். சகோதர- சகோதரி, அப்பா மகள் என அனைத்து உணர்வுகளையும் உறவுகளையும் பிரதிபலிக்கும் அழகான நிகழ்ச்சியாக பிக் பாஸ் உள்ளது. ஆனால், என்னுடைய சீசனில் அதனை நான் மிகவும் இழந்தேன். அதனால் அந்த உறவுகள் ஏற்படும் வகையிலான மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது என் விருப்பம்.பிக் பாஸ் நிகழ்ச்சியைக் கண்டு அஞ்ச வேண்டாம். இது மிகவும் அழகான நிகழ்ச்சி. பிக் பாஸ் என்பது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அனுபவம். அதனால் அதனைக் கண்டு அஞ்சத்தேவையில்லை. வாழ்க்கையை மாற்றக்கூடிய வாய்ப்புகள் இந்த நிகழ்ச்சியின் மூலம் உருவாகலாம். இம்முறை யூடியூபர்களான வி.ஜே. சித்து, ஹர்ஷத் கான் ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும். பொழுதுபோக்கிற்கு பஞ்சமே இருக்காது என அர்ச்சனா தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை கண்டு அஞ்ச வேண்டாம்… பிக்பாஸ் 7வது சீசன் டைட்டில் வின்னர் அர்ச்சனா அட்வைஸ்!
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more