Monday, November 18, 2024

காதலிக்க நேரமில்லை படத்தின் BTS வீடியோ வெளியீடு… ஜெயம் ரவிக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ஜெயம் ரவியின் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. அவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய முடிவை சமீபத்தில் எடுத்துள்ளார். நேற்றைய தினம் அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. 

அதேநேரத்தில், அவர் விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பிறந்தநாள் அவருக்கு இத்தகைய கடினமான தருணங்களை உருவாக்கியுள்ளது. நீண்ட யோசனை மற்றும் பரிசீலனைகளுக்கு பிறகு ஆர்த்தியுடன் உள்ள திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளும் முடிவை எடுத்ததாக சமீபத்தில் ஜெயம் ரவி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டுமா வேண்டாமா என்று அவரது படக்குழுவினரும் ரசிகர்களும் குழப்பத்தில் இருந்தனர். ஆனால், இந்த நேரத்தில் அவருக்கு தங்களது ஆதரவு தேவைப்படுவதைக் கவனத்தில் கொண்டு “காதலிக்க நேரமில்லை” படக்குழு அவரது பிறந்தநாள் சிறப்பாக ஒரு பிடிஎஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News