Saturday, September 14, 2024

தி கோட் படத்தில் கேப்டன் விஜயகாந்திற்காக நடிகர் மணிகண்டன் செய்த விஷயம்… பாராட்டுகளை குவிக்கும் ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தி கோட். வெங்கட் பிரபு இயக்கிய இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் விஜய்யுடன் சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தி கோட் படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியானது.

இப்படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் முகத்தை ஏஐ தொழிநுட்பம் மூலம் பயன்படுத்தி நடிக்க வைத்துள்ளனர். அதிலும் படத்தின் தொடக்கத்திலேயே கேப்டன் விஜயகாந்தை காட்டியது திரையரங்கையே அதிர வைத்தது. கேப்டன் விஜயகாந்த் வரும் காட்சிகள் சில நிமிடங்களாக இருந்தாலும், அந்தக் காட்சியை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர். இந்நிலையில், “தி கோட்” படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட விஜயகாந்துக்கு டப்பிங் கொடுத்தவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

“ஜெய் பீம்” படத்தின் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன், விஜயகாந்துக்கு டப்பிங் பேசியுள்ளார். மணிகண்டன் ஏற்கனவே பல நடிகர்களைபோல் மிமிக்ரி செய்யும் திறமையுடையவர். அதிலும் கேப்டன் விஜயகாந்தின் குரலை மிகவும் தத்ரூபமாக கொண்டு வந்துள்ளார். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள், நடிகர் மணிகண்டனை பாராட்டி வருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News