தமிழ் சினிமாவில் முன்னேறி வரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஆக்சிஸ் பிலிம் பேக்டரியின் நிறுவனர் ஜி. டில்லி பாபு. 2015 ஆம் ஆண்டு “உறுமீன்” படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான அவர், தொடர்ந்து “மரகத நாணயம்”, “இரவுக்கு ஆயிரம் கண்கள்”, “ராட்சசன்”, “ஓ மை கடவுளே”, “பேச்சிலர்”, “கள்வன்” போன்ற பல வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களை தயாரித்துள்ளார்.
சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டில்லி பாபு, செப்டம்பர் 9ஆம் தேதி நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டில்லி பாபு தொடர்ந்து படங்களை தயாரிக்க சில இயக்குநர்களுடன் ஒப்பந்தம் செய்து வந்தார். தனது மகன் தேவ்வை ஹீரோவாக்கி “வளையம்” என்ற படத்தை தயாரித்து வந்தார். மகனை ஹீரோவாக்க வேண்டும் என்பது அவரது கனவு. ஆனால், அந்த கனவு நிறைவேறுவதற்கு முன்பே அவர் மறைந்துவிட்டார்.