மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் விஜய் தேவரகொண்டாவின் 14-வது படத்தை ராகுல் சங்கராதியன் இயக்கவுள்ளார். இந்த படம் வரலாற்று படமாக உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மிகுந்த பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து, தில் ராஜூ தயாரிப்பில் விஜய் தேவரகொண்டா மற்றொரு படத்தில் நடிக்கவுள்ளார். அதில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை ரவி கிரண் கோலா இயக்கவுள்ளார். படப்பிடிப்பு குறித்து தயாரிப்பாளர் தில் ராஜூ ஆங்கில ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில், அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய் தேவரகொண்டாவுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி. விஜய் தற்போது முழுமையாக கமர்ஷியல் கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார், என்று கூறியுள்ளார். நடிகை சாய் பல்லவி, “அமரன்” படத்தை முடித்து தற்போது “தண்டேல்” படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.