Saturday, September 14, 2024

ஹாரர் படங்கள் ரூட்டை பிடித்த ராஷ்மிகா மந்தனா… மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ‘வேம்பையர் ஆஃப் விஜயநகரம்’ !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்த ஆண்டில் பாலிவுட்டில் வெளியான ஹாரர் படங்கள் பெரும் அளவில் வசூல் சாதனை செய்து வருகின்றன. ஆண்டின் தொடக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்த ‘ஷைத்தான்’ படம் வெற்றியடைந்தது. அதன் பின், கடந்த ஜூன் மாதம் வெளியான ஹாரர் படமான ‘முஞ்யா’வும் வெற்றிபெற்றது. அதேபோல, சமீபத்தில் வெளியான ‘ஸ்ட்ரீ 2’ படம் ரூ.500 கோடி வசூலை நோக்கி முன்னேறி வருகிறது.

இந்தநிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ஹாரர் படங்களுக்கு மாறி உள்ளார். ராஷ்மிகா மந்தனா, பாலிவுட்டில் ஹாரர் காமெடி ஜானரில் உருவாக உள்ள ‘வேம்பையர் ஆப் விஜயநகரம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடிக்கின்றார், இதனை ‘முஞ்யா’ படத்தின் இயக்குனர் ஆதித்யா சர்போத்தர் இயக்கவுள்ளார்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ராஷ்மிகா, அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா 2’, விக்கி கவுஷலுடன் ‘சாவா’, சல்மான் கானுடன் ‘சிக்கந்தர்’, மற்றும் தனுஷுடன் ‘குபேரா’ போன்ற படங்களில் பணியாற்றி வருகிறார்.

- Advertisement -

Read more

Local News