தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “தி கோட்” படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்தினை ஏ.ஜி.எஸ். எண்டர்டைமெண்ட் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.
இந்நிலையில், “தி கோட்” படத்தில் அஜித் நடித்துள்ளாரா என்ற கேள்வி படத்தின் பிரமோஷன்களில் தீவிரமாக உள்ள வெங்கட் பிரபுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “மங்காத்தா” படத்தில் “காவலன்” படக் காட்சி இடம் பெற்றது போல, “தி கோட்” படத்திலும் அஜித் இடம் பெறும் காட்சி உள்ளது. ஆனால், அது எவ்விதமான சீக்வென்ஸ் என்று இப்போது நான் சொல்ல முடியாது.
அஜித் மற்றும் விஜய் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். “தி கோட்” படத்தில் அஜித் இருக்கும் காட்சி ரசிகர்களுக்கு பெரும் திருப்தியைக் கொடுக்கும்” என்று கூறியுள்ளார். வெங்கட் பிரபுவின் இந்தப் பேச்சு, விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அஜித் ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.