நடிகர் விஷால் தனது 47வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் முதியோர்களுக்கு உணவு வழங்கி பிறந்தநாளை கொண்டாடிய பின்னர் செய்தியாளர்களிடம் விஷால் செய்தியாளர்கள் சந்திப்பில் மலையாள திரையுலகில் குவிந்துள்ள பாலியல் புகார்கள் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, 80 சதவீத பெண்கள் நடிக்க வாய்ப்புத்தேடி வந்து ஏமாற்றப்படுகிறார்கள். அவர்கள் வாய்ப்புத்தேடி செல்லும் நிறுவனங்கள் பற்றி ஆராய்ந்து செல்வது நல்லது.
பெண்கள் சுதாரிப்புடன் இருக்க வேண்டும். கேரளாவின் ஹேமா கமிட்டி போலவே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் 10 பேர் கொண்ட ஒரு கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், விரைவில் அறிவிப்பு வெளியாகும். இது எங்களின் கடமை.
தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் ‘அட்ஜஸ்ட்மென்ட்’ என்று சொன்னால், செருப்பால் அடியுங்கள். தங்களை பயன்படுத்திக்கொள்ள நடிகைகள் அனுமதிக்க கூடாது. சில உப்புமா கம்பெனிகள் கேமராவை எடுத்துக்கொண்டு வாய்ப்பு தருவதாக கூறி போட்டோஷூட் எடுத்து, பெண்களை பயன்படுத்திவிட்டு தப்பித்து விடுகின்றனர். இது தமிழ் சினிமாவிலும் இருப்பதை ஒப்புக்கொள்கிறேன்,” என்றார்.