நடிகை சமந்தா, நடிப்பைத் தாண்டி ஆரோக்கியம் பற்றிய பாட்காஸ்ட்களில் பேசுவதில் ஈடுபட்டுள்ளார். நடிகை நயன்தாரா பல்வேறு புதிய தொழில்களை ஆரம்பித்துள்ள நிலையில், சினிமாவைத் தாண்டி தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த நடிகை சமந்தா, தற்போது Pickle Ball விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகிறார்.
பிங்க் நிற ஜிம் உடை அணிந்து, விளையாட்டு வீரர்களுடன் இணைந்து செம ஜாலியாக விளையாடும் நடிகை சமந்தாவின் வீடியோ, கிரிக்கெட் போட்டியில் நம்ம ஊர் தலைவர்கள் விளையாடும் போது போல, மிக மெதுவாக விளையாடுவதும், பந்துகளை தவறவிட்டால், பேட்டை தலையில் வைத்துக் கொண்டு காமெடி செய்வதுமான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருகிறது.
மேலும், வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 69 படத்தில், சமந்தாவே ஹீரோயின் என்கிற பேச்சுக்கள் நிலவுகின்றன. தளபதி விஜய்யின் கடைசி படத்தில் மேலும் சில நடிகைகள் ஜோடி போட்டு நடிக்க போட்டி போட்டு வருவதாகவும், சீக்கிரமே ஹீரோயினை எச். வினோத் உறுதி செய்வார் என்றும் கூறப்படுகிறது.