Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ஆணுக்காக எழுதப்பட்ட கதாபாத்திரத்தை பெண்ணுக்காக மாற்றி நடித்த மஞ்சு வாரியர்… புட்டேஜ் படம் குறித்து சுவாரஸ்யம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை மஞ்சு வாரியர் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பல இயக்குனர்கள் அவரை மையமாக வைத்து கதைகளை உருவாக்கி வருகின்றனர். அண்மையில் மஞ்சு வாரியர் நடிப்பில் ‘புட்டேஜ்’ என்ற படம் வெளியானது.

ஷைஜு ஸ்ரீதரன் இயக்கிய இப்படத்தில், முதலில் ஆணுக்காக எழுதப்பட்ட கதாபாத்திரத்தை மஞ்சு வாரியர் தன்னை மையமாகக் கொண்டு மாற்றியுள்ளார். இதற்கு முன்பு படத்தொகுப்பாளராக பணியாற்றிய இவர், இந்த படத்தின் மூலம் இயக்குநராக தனது தொடக்கத்தை செய்துள்ளார். இப்படத்தின் கதையை ஷப்னா முகமது எழுதியுள்ளார்.

மஞ்சு வாரியர் இப்படத்தில் நடித்ததற்கு காரணம், கதையும், கதாபாத்திரமும் அவரை மிகவும் ஈர்த்தது என்பதே. இதனால், அவர் இப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News