ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘வேட்டையன்’ திரைப்படம் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமாக உள்ளது. இதில் ரஜினிக்கு இணையாக, அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது, மேலும் அனிரூத் இசையமைக்கிறார்.
படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில், கடந்த சில வாரங்களாக டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு, இப்படம் அக்டோபர் 10 அன்று திரைக்கு வரும் என அறிவித்தனர்.
தற்போது, செப்டம்பர் 20 அன்று, ‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.