Tuesday, November 19, 2024

நாடெங்கும் நமது கொடி பறக்கும்…தமிழகம் இனி சிறக்கும்… அறிமுகமாகிறது த.வெ.க கொடி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம்’ கட்சிக் கொடியை நாளை (ஆக.,22) அறிமுகம் செய்யவுள்ள நடிகர் விஜய், ‘நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்; தமிழகம் இனி சிறக்கும்’ என அறிக்கை வெளியிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற தன் ரசிகர் மன்றத்தை, கடந்த பிப்ரவரி 2ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியாக விஜய் மாற்றினார். லோக்சபா தேர்தலுக்கு முன்பே கட்சி துவங்கினாலும், 2026 சட்டசபை தேர்தலே இலக்கு என அறிவித்தார். தனி கட்சி துவங்கி விட்டதால், இருக்கும் படங்களை முடித்து, முழுநேரமாக அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்த விஜய், கட்சியை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, வரும் செப்., 22-ம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடக்கவுள்ளது. மாநாட்டிற்கு முன்னதாக நாளை (ஆக.,22) பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திலேயே புதிய கொடியை விஜய் அறிமுகம் செய்ய இருக்கிறார்.

இது தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கை: சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழகத்தின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கட்சிக் கொடிப் பாடலை வெளியிட்டு, கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் மகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்; தமிழகம் இனி சிறக்கும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டு, நாளை காலை 9:15 மணிக்கு கொடி அறிமுகம் செய்ய உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News