Tuesday, November 19, 2024

மாரி செல்வராஜ் யார்? அவருடைய வாழ்க்கை என்ன? என்பதை இப்படம் உணர்த்தும்… இப்படம் பார்க்கும்போது நமக்கு நெருக்கமானதாக இருக்கும் – நடிகர் சிவகார்த்திகேயன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற ‘வாழை’ படத்தின் ப்ரீ ரிலீஸ் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர்கள் ரஞ்சித், வெற்றிமாறன், சசி, மிஷ்கின், அருண் மாதேஸ்வரன் ஆகியோர் உட்பட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வீடியோ மூலம் நடிகர் சிவகார்த்திகேயனும் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

‘வாழை’ திரைப்படம், மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவங்களை சினிமா மூலம் விவரிக்கிறது. இது வாழ்க்கையில் நிகழ்ந்ததையொன்றைப் படம் என்பதால், ஒரு சாதாரண மகிழ்ச்சியான விஷயத்தை மிஞ்சிய பெரும் நிகழ்வை இப்படத்தில் அவர் பதிவு செய்துள்ளார். எளிய மக்களின் துன்பம், வேதனை, கண்ணீர், மகிழ்ச்சி, சிரிப்பு போன்ற அனைத்தையும் அவர்கள் வாழ்க்கையை படம் பிடிக்கும் போது அந்த சினிமா மிகவும் அழகாக இருக்கும். அதேபோல், ‘வாழை’ திரைப்படத்திலும், மாரி செல்வராஜ் தனது வாழ்க்கையில் நிகழ்ந்த மகிழ்ச்சியான தருணங்களையும் மிக முக்கியமான நிகழ்வுகளையும் படத்தில் சொல்லியுள்ளார். இப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு நெருக்கமான ஒருவரிடம் அவர்களின் கதையை கேட்பது போல உணர்வு ஏற்படும். ‘வாழை’ திரைப்படத்தில் வரும் காட்சிகள், இசை அனைத்தும் நமக்கு நெருக்கமான உணர்வுகளை தருகின்றன.

இந்தப் படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் இது உண்மை கதை என்பதால் மிகவும் நம்பிக்கையுடன் உழைத்துள்ளனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மாரி செல்வராஜ், மீண்டும் ஒருமுறை தனது அனுபவத்தை மட்டுமல்ல, வலிமையான இயக்குநர் என்பதையும் இத்திரைப்படத்தில் நிரூபித்துள்ளார். அவரது கடந்த இரண்டு படங்களும் கமர்ஷியல் வெற்றி பெற்றவை. ஆனால் ‘வாழை’ படம் முழுக்க முழுக்க வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

எனக்கு, ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்கு பிறகு மிகவும் பிடித்த படமாக ‘வாழை’ அமைந்துள்ளது. மாரி செல்வராஜ் யார்? அவருடைய வாழ்க்கை என்ன? அவர் என்னென்ன சோதனைகளை கடந்து இன்று ஒரு இயக்குநராக உயர்ந்தார் என்பதை அறிய இப்படம் ஒரு வாய்ப்பாக இருக்கும். இப்படம் பல விருதுகளை வெல்லும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது என்று சிவகார்த்திகேயன் கூறினார்.

- Advertisement -

Read more

Local News